New version available here: vedabase.io

Bg 9.8

ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய
விஸ்ருஜாமி புன: புன:
பூத-க்ராமம் இமம் க்ருத்ஸ்னம்
அவஷம் ப்ரக்ருதேர் வஷாத்
Synonyms: 
ப்ரக்ருதிம் — ஜட இயற்கை; ஸ்வாம் — எனது சுய; அவஷ்டப்ய — நுழைகின்றது; விஸ்ருஜாமி — படைக்கின்றேன்; புன: புன: — மீண்டும் மீண்டும்; பூத-க்ராமம் — பிரபஞ்ச தோற்றமெல்லாம்; இமம் — இந்த; க்ருத்ஸ்னம் — முழு; அவஷம் — தாமாகவே; ப்ரக்ருதே — இயற்கையின் உந்துதலால்; வஷாத் — கட்டுப்பட்டு.
Translation: 
பிரபஞ்ச தோற்றம் முழுவதும் எனக்குக் கீழ்ப்பட்டது. எனது விருப்பப்படி அது மீண்டும் மீண்டும் தானாகப் படைக்கப்பட்டு, இறுதியில் எனது விருப்பப்படி அழிக்கப்படுகின்றது.
Purport: 

பரம புருஷ பகவானின் தாழ்ந்த சக்தியின் தோற்றமே இந்த ஜடவுலகம். இதனை பல முறை விளக்கியுள்ளோம். படைப்பின்போது, ஜட சக்தி மஹத்-தத்த்வமாக விடுவிக்கப்படுகின்றது. பகவானின் முதல் புருஷ அவதாரமான மஹாவிஷ்ணு அதனுள் நுழைகிறார். காரணக் கடலில் படுத்துக் கொண்டிருக்கும் அவர், தமது சுவாத்தின்போது எண்ணற்ற அண்டங்களை படைக்கின்றார். அவை ஒவ்வொன்றிலும் அவர் மீண்டும் கர்போதகஷாயி விஷ்ணுவாக நுழைகின்றார். ஒவ்வொரு பிரபஞ்சமும் இப்படித்தான் படைக்கப்படுகிறது. அவர் மீண்டும் க்ஷீரோதகஷாயி விஷ்ணுவாக விரிவடைகிறார். அந்த விஷ்ணு மிகவும் நுண்ணிய அணுவிற்குள்ளும் நுழைகின்றார். அவர் எல்லாவற்றிலும் நுழைகின்றார் என்ற இவ்வுண்மை இங்கே விளக்கப்பட்டுள்ளது.

ஜீவாத்மாக்களைப் பொறுத்தவரை, அவர்கள் இந்த ஜட இயற்கையினுள் கருவூட்டப்படுகின்றனர், தமது முந்தைய செயல்களின் அடிப்படையில் பல்வேறு நிலைகளை அடைகின்றனர். இதன் மூலம் ஜடவுலகின் செயல்கள் தொடங்குகின்றன. இவ்வாறாக, பல்வேறு உயிரினங்களின் இயக்கங்கள் படைப்பின் ஆரம்ப காலத்திலேயே தொடங்குகின்றன. அவை பரிணமிப்பவை அல்ல. பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே பல்வேறு உயிரினங்களும் உடனடியாக படைக்கப்பட்டன. மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் ஒரே நேரத்தில் படைக்கப்படுகின்றன; ஏனெனில், முந்தைய பிரளயத்தின்போது குறிப்பிட்ட ஜீவாத்மாவின் விருப்பம் என்னவோ, அதற்கேற்ப அவன் மீண்டும் தோன்றுகின்றான். படைப்பில் ஜீவாத்மாக்களுக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதை அவஷம் எனும் வார்த்தை தெளிவாக் குறிப்பிடுகிறது. முந்தைய படைப்பின் முந்தைய வாழ்வில் ஜீவாத்மாவின் நிலை என்னவோ, அந்நிலை மீண்டும் வெளிப்படுகின்றது. அவரது விருப்பம் போதும், இவையனைத்தும் தானாக நடந்தேறிவிடும். இதுவே பரம புருஷ பகவானின் அசிந்திய சக்தியாகும். பற்பல உயிரினங்களைப் படைத்தபின், அவருக்கு உயிரினங்களுடன் எவ்விதத் தொடர்புமில்லை. பல்வேறு உயிர்வாழிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காகவே இவ்வுலகம் படைக்கப்படுகிறது; எனவே, இறைவன் இதில் ஈடுபடுவதில்லை.