Bg 6.1

ஸ்ரீ-பகவான் உவாச
அனாஷ்ரித: கர்ம-பலம்
கார்யம் கர்ம கரோதி ய:
ஸ ஸன்ன்யாஸீ ச யோகீ ச
ந நிரக்னிர் ந சாக்ரிய:
Synonyms: 
ஸ்ரீ-பகவான் உவாச — பகவான் கூறினார்; அனாஷ்ரித — அடைக்கலமின்றி; கர்ம-பலம் — செயலின் பலன்; கார்யம் — கடமை; கர்ம — செயல்; கரோதி — செய்பவன்; ய: — எவனொருவன்; ஸ: — அவன்; ஸன்ன்யாஸீ — துறவி; — மேலும்; யோகீ — யோகி; — மேலும்; — இல்லை; நி: — இல்லாத; அக்னி — நெருப்பு; — இல்லை; — மேலும்; அக்ரிய: — கடமையின்றி.
Translation: 
புருஷோத்தமரான முழு முதற்கடவுள் கூறினார்: செயலின் பலன்களில் பற்றற்று, கடமைக்காகச் செயலாற்றுபவனே சந்நியாசியும் உண்மையான யோகியுமாகிறானே தவிர, வேள்வி நெருப்பை மூட்டாதவனும் செயலற்றவனுமல்ல.
Purport: 

இந்த அத்தியாயத்தில், எட்டு அங்கங்களைக் கொண்ட அஷ்டாங்க யோகத்தினை, மனதையும் புலன்களையும் அடக்குவதற்கான வழியாக பகவான் விளக்குகிறார். ஆனால் இம்முறை சாதாரண மக்களுக்கு (குறிப்பாக இக்கலி யுகத்தில்) மிகவும் கடினமானதாகும். இவ்வத்தியாயத்தில் அஷ்டாங்க யோக முறை விளக்கப்பட்டிருப்பினம், கிருஷ்ண உணர்வில் செயலாற்றதலே (கர்ம யோகமே) சிறந்தது என்று கடவுள் வலியுறுத்துகிறார். தனது குடும்பத்தையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பதற்காகவே உலகிலுள்ள அனைவரும் செயல்படுகின்றனர். ஆனால் சுயநலனின்றி (அது தனிப்பட்ட இலாபமாகவும் இருக்கலாம், விரிவடைந்த இலாபமாகவும் இருக்கலாம்) செயலாற்றுவோர் யாருமில்லை. செயலின் பலன்களை அனுபவிக்கும் நோக்கத்தைத் தவிர்த்து கிருஷ்ண உணர்வில் செயல்படுவதே பக்குவமானதாகும். கிருஷ்ண உணர்வில் செயல்படுதல் என்பது ஒவ்வோர் உயிர்வாழியின் கடமையாகும்; ஏனெனில், உண்மையில் அனைவருமே பகவானது அம்சங்கள். உடலின் அங்கங்கள், முழு உடலின் திருப்திக்காக செயல்படுகின்றன; அவை தமது சுய திருப்திக்காக செயல்படாமல், முழு உடலின் திருப்திக்காக பணியாற்றுகின்றன. அதுபோலவே, தனது சுய திருப்திக்காக செயல்படாமல் பகவானின் திருப்திக்காக மட்டுமே செயலாற்றுபவன், பக்குவமான சந்நியாசியும் பக்குவமான யோகியுமாவான்.

சந்நியாசிகள் சில சமயம் எல்லா பௌதிகக் கடமைகளிலிருந்தும் தாம் விடுதலை பெற்றுவிட்டதாக செயற்கையாக எண்ணிக் கொள்வதால், அக்னி ஹோத்ர யக்ஞங்கள் செய்வதை விட்டு விடுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்களும் சுயநலவாதிகளே; ஏனெனில், அவர்களின் குறிக்கோள் அருவ பிரம்மனுடன் ஒன்றாகுவதே. இத்தகைய விருப்பம் சாதாரண பௌதிக விருப்பங்களைவிடச்; சிறந்தது என்றபோதிலும், இது சுயநலமற்ற விருப்பம் கிடையாது. அதுபோல, எல்லா உலகச்; செயல்களையும் நிறுத்திவிட்டு பாதி மூடிய கண்களுடன் யோகப் பயிற்சி செய்யும் யோகியும், தனது சுயநலத்திற்காக ஏதோ ஒரு திருப்தியை நாடுகிறான். ஆனால் கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன், எவ்வித சுயநல நோக்கமுமின்றி பூரணத்தின் திருப்திக்காகவே செயலாற்றுகிறான். கிருஷ்ண பக்தனுக்கு சுய திருப்தியில் எவ்வித அக்கறையும் இல்லை. கிருஷ்ணரது திருப்தியையே அவன் வெற்றியாகக் கருதுகிறான். எனவே, அவனே பக்குவமான சந்நியாசியும் பக்குவமான யோகியுமாவான். சந்நியாசத்தின் மிகவுயர்ந்த நிலைக்கு இலக்கணமாகத் திகழும் பகவான் சைதன்யர், பின்வருமாறு பிரார்த்தனை செய்கிறார்:

ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம்
கவிதாம் வா ஜகத் ஈஷ காமயே
மம ஜன்மனி ஜன்மனீஷ் வரே
பவதாத் பக்திர் அஹைதுகீ த்வயி

"எல்லாம் வல்ல பெருமானே, பொருள் சேர்க்கும் ஆசை எனக்கில்லை, அழகிய பெண்களை அனுபவிக்கும் ஆசையும் எனக்கில்லை. என்னைப் பின்பற்றுவோரும் எனக்கு வேண்டாம். பிறவிதோறும் உமக்கு பக்தித் தொண்டு ஆற்றுவதற்கான காரணமற்ற கருணையையே நான் விரும்புகிறேன்."