New version available here: vedabase.io

Bg 2.40

நேஹாபி க்ரம– நாஷோ (அ)ஸ்தி
ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய
த்ராயதே மஹதோ பயாத்
Synonyms: 
— இல்லை; இஹ — இந்த யோக; அபிக்ரம — முயற்சியில்; நாஷ: — இழப்பு; அஸ்தி — இங்கு; ப்ரத்யவாய — குறைவு; — என்றுமில்லை; வித்யதே — இதில்; ஸ்வல்பம் — சிறிதே; அபி — ஆயினும்; அஸ்ய — இதில்; தர்மஸ்ய — கடமையின்; த்ராயதே — விடுவிக்கிறது; மஹத: — மிகப்பெரிய; பயாத் — பயத்திலிருந்து.
Translation: 
இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.
Purport: 

கிருஷ்ண உணர்வில் செயல்படுதல், அதாவது, புலனுகர்ச்சியின் எதிர்பார்ப்புகளின்றி கிருஷ்ணரின் நலனுக்காக செயலாற்றுதல் என்பது செயலின் மிகவுயர்ந்த தெய்வீக குணமாகும். இதுபோன்ற செயலின் ஒரு சிறு ஆரம்பம்கூட எந்தத் தடையையும் காண்பதில்லை, அந்த சிறு ஆரம்பம் எந்நிலையிலும் இழக்கப்படுவதுமில்லை. பௌதிகத் தளத்தில், தொடங்கப்பட்ட செயல் முடிவு பெற்றாக வேண்டும். இல்லையேல் அனைத்து முயற்சியும் வீணாகி விடுகிறது. ஆனால், கிருஷ்ண உணர்வில் தொடங்கப்பட்ட எல்லா செயல்களும், முடிவு பெறாவிடினும்கூட, நிரந்தரப் பலனைக் கொடுக்கும். எனவே, கிருஷ்ண உணர்வில் செய்யப்படும் செயல் முற்றுப் பெறாவிடினும், அதைச் செயலாற்றுபவருக்கு எவ்வித இழப்பும் இல்லை. கிருஷ்ண உணர்வில் ஒரு சதவீதம் செயல்பட்டாலும் நிரந்தர விளைவு உண்டு, நீங்கள் மீண்டும் இரண்டாவது சதவீதத்திலிருந்து தொடங்கலாம். ஆனால் ஜடச் செயல்களிலோ நூறு சதவீதம் வெற்றி இல்லாவிடில், ஓர் இலாபமுமில்லை. அஜாமிளன் தன் கடமையை கிருஷ்ண உணர்வில் சிறு அளவே செய்தான். எனினும், பகவானின் கருணையால் இறுதியில் நூறு சதவீத பலனை அடைந்தான். இது சம்பந்தமாக ஸ்ரீமத் பாகவத்தில் (1.5.17) நல்ல பதம் ஒன்று இருக்கிறது:

த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரேர்
பஜன் நபக்வோ (அ)த பதேத் ததோ யதி
யத்ர க்வ வாபத்ரம் அபூத் அமுஷ்ய கிம்
கோ வார்த ஆப்தோ (அ)பஜதாம் ஸ்வ-தர்மத:

"தன்னுடைய கடமைகளை விட்டுவிட்டு கிருஷ்ண உணர்வில் செயல்படத் தொடங்கியவன், தனது செயலை சரிவர முடிக்காமல் வீழ்ச்சியடைந்தாலும், அவனுக்கு என்ன நஷ்டம்? ஜடச் செயல்களை நன்றாகச் செய்பவன், அதில் என்ன பலனை அடைய முடியும்?" அல்லது, கிறிஸ்துவர் கூறுவதுபோல, "தனது நித்திய ஆத்மாவை இழப்பவன், இவ்வுலகம் முழுவதையும் பெறுவதன் பலன் என்ன?"

ஜடச் செயல்களும் வினைகளும் உடலுடன் முடிந்து போகின்றன. ஆனால் கிருஷ்ண உணர்வில் செய்யப்படும் செயல்கள், உடலை விட்ட பின்னும் ஒருவனை மீண்டும் பக்திக்கு கொண்டு வருகின்றன. உயர்வு பெற மற்றொரு வாய்ப்பாக, (குறைந்தபட்சம்) சிறந்த பண்பாடுடைய அந்தணர் குடும்பத்திலோ செல்வம் நிறைந்த குடும்பத்திலோ பிறக்கும் வாய்ப்பு ஒருவனுக்கு நிச்சயம். கிருஷ்ண உணர்வில் செய்யப்படும் செயல்களின் தன்னிகரற்ற தன்மை இதுவே.